பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 32 'ஊழ்வினையால் கோவலனுக்கு அந்த முடிவு' என அடிகள் குறிப்பிடுவது குறிப்பிட்ட சமயஞ் சார்ந்தவனாக கோவலன் இருந்ததால், அந்தக் காலச் சூழலில் அச்சமூகத்தினைத் தற்காலிக மாகத் திருப்திப்படுத்தவே. எனவே பிந்திய கம்பனின் இராமாயணம் ஆடவர்க்கு வற்புறுத்தும் ஒழுக்க நெறியின் வேர், சிலம்பில் இளங்கோவடிகளால் அவ்வொழுக்கத்தை மீறிய ஆடவனுக்கு முடிவு மரணமாக ஏதோ ஒரு வடித்தில் வரும் என்று எழுதி யிருப்பதில் பொதிந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் கதைக்கப்பாற்பட்ட களங்கள் நிறைந்தது வஞ்சிக்காண்டம். அது ஒரு பின் இணைப்பு (Appendix) போல என்று சொல்லமுடியாவிடடாலும் கதை முடிந்த பின் நிகழ்வதாக அமைந்துள்ளது. இன்று காவேரி நீர் கர்நாடகத்திலிருந்து வருமாடி கிருஷ்ணா நதி நீர்சென்னையை என்று சேரும்? என்று ஏங்குகிறோம். அன்று இளங்கோவடிகள் தென்னக அளவிளாவது சேர, சோழ, பாண்டியர்க்கு இடையில் ஒருமைப்பாடு உருவாக அடிகோலி யுள்ளார். மூன்று காண்டங்களின் மூலம்; பத்தினி வழிபாடு நிறைவேற்ற வடக்கே செல்ல நேர்கிறது. விழாவிற்கு இலங்கைக் கயவாகு வருகிறார். இவ்வாறு தமிழக எல்லை கடந்து கதையின் களங்களை விரிவுபடுத்துவதற்காக வஞ்சிக் காண்டத்தை உருவாக்கியுள்ளார். ஆகவே பிந்திய சிந்தனைகளின் வேர்களை நாம் சிலம்பில் தேடினால் காணமுடிகிறது. 'இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால், பதுக்கிற வேலையும் இருக்காது' ஒதுக்கிற வேலையும் இருக்காது' என்ற பட்டுக்கோட்டையின் பாடலும் சரி 'பொதுவுடமை கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்' என்னும் பாவேந்தர் வரிகளும் சரி பொதுவுடமை அகிலம் மூலம் பெற்ற சிந்தனைகளின் பிரதிபலிப்பே. ஆனால் அப்பட்டமாக அப்படியே இல்லாமல் வேறு வடிவத்தில் இருக்கின்றன. காரணம் பசி என்பது உலகில் எப்பகுதியில் உள்ளோர்க்கும் பொதுவானது. பசித்தவன் பிரச்சனை தீர பாதை தேடித்தானே ஆகவேண்டும். அப்படிப் பாதை காட்டியவர்களுள் வள்ளுவர் நம் கண் முன் நிற்கிறார் திருக்குறள் மூலம்: தம்இல் இருந்து தமது பாத்துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு என்று பாத்துண் எனும் பகுத்துண்ணல் நெறியினை பொதுவுடைமை நெறியினை, இன்பத்தைப் தமக்குப் பொதுவாக்கிக் கொண்ட