பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ் இலக்கியம்: வேர்களைத் தேடுவோம் - 2 ஆண்டவனின் அடியும் நுனி(உச்சி)யும் காணப் புறப்பட்டவர்கள் தோல்வி கண்டதாகத் திருவண்ணா மலைத் தலபுராணம், அந்த ஆண்டவனின் பெருமை பரப்பக் கதை சொல்லிக்கொண்டிருந்த போதிலும் ஆற்றல் உள்ளவர்கள் அடியும் நுனியும் காணும் முயற்சியில் அசந்துவிடவில்லை. இல்லாவிட்டால் டென்சிங் நார்ககேயும் எட்மண்ட் ஹிலாரியும் இமயத்தின் உச்சியைத் தொட்டு வந்திருப்பார்களா? கடலின் ஆழத்தை விஞ்ஞானிகள் அளந்து கண்டிருப்பார்களா? வேர் காணும் முயற்சி அறிவின் முதிர்ச்சி! 'நதிமூலம் ரிஷிமூலம் காண முயல்வதுகூடாது' என்பது ஆராய்ச்சி ஆர்வத்திற்குத் தடைக்கல்லாகும். காங்கோ நதியின் மூலம் எங்கிருக்கிறது என்று எங்கோ பிறந்த மங்கோபார்க், ஆஃபிரிக்கா வந்து தேடியிரா விட்டால் ஆஃபிரிக்காவின் பல அதிசயங்கள் அகிலத்திற்குத் தெரிய வந்திருக்காது. மூலத்தைக் கண்டறிவது வேர்களைத் தேடியறிவது என்ப தெல்லாம் வீண்வேலையல்ல; வியர்த்தமான முயற்சியல்ல. வளைவும் செறிவுமாக உள்ள பச்சைப் பசேலென்ற இலைகளும் பூங்கொத்துக்களும் கனிகளும் காய்களும் தொங்கும் மரத்தின் கிளைகள் கண்ணுக்குத் தெரிகின்றன. இவைகளையெல்லாம் தாங்கி நிற்க, இந்த மரத்திற்கு ஏதோ ஒன்று சக்தியைத் தந்திருக்கவேண்டும். அழகான மாளிகையின் மாடங்களும் சாளரங்களும் கண்ணுக்குத் தெரிகிறமாதிரி அதன் அடிப்படை (அஸ்திவாரம்) கண்ணுக்குத்