பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 36 பார்வையில்பட்டுத் தெறித்தன. அந்தப் பாதச் சுவடுகள் காட்டிய பாதையில் சென்று அடைந்தபோது வேர்களில் கொண்டுபோ, விட்டன. அந்த வேர்கள் தமிழில் எத்தனையோ நூற்றாண்டுகளாக வழங்கி வந்த, "வாய்மொழிப் பாடல்கள்' என்று கண்டு தெளிய முடிந்தது. இதனைக் கண்டறிந்து சொன்ன ஆய்வாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்லப்போனால் எந்த சார்பும் இல்லாத டாக்டர் மு.வ. (தமிழ் இலக்கிய வரலாறு), மார்க்சியப் பார்வை உடைய கே. முத்தையா (தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்) இருவரையும் (சான்று தருபவர்களாக) சொல்லலாம். 'மனிதன், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உணவு உற்பத்திக்கான கருவிகளைக் கண்டு உற்பத்தியில் ஈடுபடும்போது, அவனுடைய மொழியும் வளரும் வாய்ப்பு பெற்றபோது, உற்பத்திப் பொருள்களைக் குறிக்கச் சொற்கள் எழுந்தனவாம். அதன் வழி தொடக்க கால வாய்மொழிப் பாடல்கள் உருவாகின. (ப. 14. கே.மு. 'க.இ. 'கூறும் வர்க்க சமுதாயம்) வடமொழியின் கருவூலங்களான வேதங்கள் கூட வாய்மொழிப் பாடல்களாக வழங்கியவைதாம். வரலாற்றிற்கு உதவும் கல்வெட்டுச் சாசனங்கள் இல்லாத நிலையில் ஆஃபிரிக்காவில் வாய்மொழிக் கதைகள் ஆதாரங்களாக ஏற்கப்பட்டு, யுனெஸ்கோ வெளியிட்ட 'ஆஃபிரிக்காவின் பொதுவரலாறு பல வாய்மொழிப் பாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் ஏட்டில் எழுதப்படுவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே (வாய்மொழி வடிவில்) நடைமுறை வழக்கில் இருந்தவை (கே.மு "..... ' ப.16) 'ஒரு நாட்டில் எத்தனையோ நூற்றாண்டுகள் வாய்மொழி இலக்கியம் (Folk Literature) மக்களிடையே வழங்கிய பிறகே புலவர் சிலர் அவற்றில் சிலவற்றிற்கு எழுத்து வடிவம் தருவது உண்டு.... சங்க இலக்கியத்தில் உள்ள பாட்டுகள் தோன்றுவதற்கு முன்னமே அவற்றிற்கு அடிப்படையான வாய்மொழிப் பாடல்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே மக்களின் மகிழ்ச்சிக்காகப் பாடப்பட்டு வந்தன" (டாக்டர் முவ' த.இ.வரலாறு - ப.27-28)