பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 37 சங்க இலக்கியத்தின் வேர்கள் அல்லது அடிப்படை வாய்மொழிப் பாடல்கள் தாம் என்று வாய்க்கு வந்தபடி கூறிவிட முடியுமா? எனவே உரிய காரணம் கூறப்படுகிறது: அந்த வாய்மொழிப் பாடல்களின் மரபுகள் பின்னர் புலவர்களால் இயற்றப்பட்ட பாட்டுக்களில் படிந்துள்ளன. புலவர் பாட்டுகளின் மரபுகளை ஆராய்ந்து புலவர் சிலர் இலக்கண நூல்களை இயற்றினார்கள் (அதன் பிறகே) தொல்காப்பியனார் தோன்றித் தம்முடைய நூலை இயற்றினார். ' (மு.வ.'த.இ.வ' ப.28) வாய்மொழிப்பாடல் மரபு வழி வந்தவை நம் பழந்தமிழ் இலக்கியம் என்பதற்கு தொல்காப்பியம் சான்று தருவதை திரு.கே.முத்தையா சுட்டிக் காட்டியுள்ளார்: தொல்காப்பியத்தின் எண்னற்ற பாடல்களில் என்ப: மொழிப' என்மனார் புலவர் என்று சூத்திரங்களில் (பெயர் குறிப்பிடாமல்) வரும் இறுதிச்சொற்கள் வாய்வழி நின்ற பண்டைய இலக்கியத்தை உருவாக்கியவர் (களாக) அதற்கு இலக்கணம் வாய் வழியே வகுத்துக் கொண்ட முன்னோரையே குறிப்பிடுகின்றன: அதனால்தான் நாட்டுப் பாடல்களைக் குறிக்க பண்ணத்தி' எனுஞ் சொல்லை தொல்காப்பியர் பயன்படுத்துகிறார். கடற்கரையிலும் காட்டிலும் மலையிலும் கழனிகளிலும் தமிழ் ஆடவரும் பெண்டிரும் இயற்கையோடு இயைந்து, இழைந்து, இணைந்தும் பிரிந்தும், இடையே ஊடல் கொண்டும் தமிழகத்தின் பலப்பல ஊர்களில் நடத்திய காதல் வாழ்க்கை பற்றிக் குறிப்பிட வந்த மு.வ. 'அந்த ஊர்களில் தோன்றி வழங்கிய வாய்மொழிக் கதைகளும் பாடல்களும் நாடகங்களும் அந்தக் காதல் வாழ்க்கையை மையப் பொருளாகக் கொண்டிருக் கின்றன. சிற்றுர் மக்களின் இயற்கையோடியைந்த வாழ்வும் தொழில்களும் அந்த நாட்டுப் பாடல்களில் பாடப்பட்டன’’ - (மு.வ., த.இ.ப.-30) அவ்வாறெனில் அந்த நாட்டுப் பாடல்கள் என்ன ஆயின? அந்தப் பண்டை நாட்டுப் பாடல்கள் அவற்றின் உண்மையான உருவில்