பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 41 பொழுதெப்ப விடியும் பூவெப்ப மலரும் சிவனெப்ப வருவார்? பலனெப்ப தருவார்? இப்படி வழங்கும் பசும்பொன் (செட்டிநாட்டு) மாவட்ட நாட்டுப் பாடல்களில் தலைவன் பிரிவால் வாடி நிற்கும் தலைவியின் துயர் வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட நாட்டுப் பாடல்களில் பெயர் கட்டப்படுவதில்லை. "சிவன்' என்றால் பொதுவாக ஆண்ட வனைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அவளுக்கு அவன் இறைவன். "வீரம் முதலியவற்றைப் பற்றிப் பாடும்போது, இன்ன தலைவனு டையது என்று அவனுடைய பெயர் முதலியவற்றைக் குறிப்பிட்டுப் பாடுவதே பெருமைக்கு உரியதாக இருந்தது. ஆனால் காதல் பற்றிப் பாடும்போது, அது பொதுவான கற்பனையாக பெயர் முதலியவை சுட்டாத பாடலாக இருந்தால்தான், அந்தப் பாடலை மக்கள் பலரும் பாடிச் சுவைக்க முடியும். ஆகையால் நாட்டுப்பாடல்களில் பெயர் குறித்துப் பாடாமல் காதலன், காதலி, தலைவன், தலைவி என்று பொதுவாகக் கூறிப் பாடுவது என்ற மரபு அமைந்தது. அந்த மரபே சங்க இலக்கியத்தில் உள்ள அகப்பாட்டுக்களிலும் உள்ளது' (மு.வ. 'த.இ.வ. ப.33) எனும் டாக்டர் மு.வ. அவர்களின் கருத்துப்படி, வாய்மொழிப் பாடலில் காதலர் பெயர் குறிப்பிடாத மரபு சங்கப் பாடல்களிலும் பின்பற்றப்பட்டது தெளிவாகிறது. கப்பல் வருமென்று கரையோரம் காத்திருந்தேன் கப்பல் கவிழ்ந்த தென்று கன்னத்தில் கைவைத்தழுதேன் (கோவை மாவட்ட நாட்டுப்பாடல்) என்ற நாட்டுப்பாடலில் தலைவன் பிரிவால் வாடி கடற்கரையில் காத்து நிற்கும் நெய்தல் திணையில் வரும் தலைவி போல வாடும் ஒரு பெண்ணின் வாட்டம் அறியப்படுகிற அதேவேளையில், அயல்நாட்டுக்கு சரக்குகளை வாணிபத்திற்கு அனுப்பிய தமிழ் வணிகன் அது கவிழ்ந்தது கேட்டு கன்னத்தில் கை வைத்தது கவலை'யின் அறிகுறியாக என்பதனால் இந்தத் தலைவி கன்னத்தில் கை வைத்தது கவலையின் அறிகுறி என்று சங்ககால