பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிழைக்கத் தெரியாத பெண் ←← ஒரே படத்தில் இரு கதைகள். இயக்குநர் பாலசந்தருக்கு முன் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் திரையுலகில் புதுமை செய்தார். 'இழந்த காதல் - சந்திரஹரி என்ற அந்தப் படத்தின் முதற் கதையில் சோகச் சுமை; இடைவேளைக்குப் பின் தொடரும் சந்திரஹரியில் சுமையை மறக்கடிக்கும் சுகமான நகைச்சுவை. பொன் விளையும் பூமியைப் பொய் விளையும் பூமியாக்கிய புண்ணியவான்களை எள்ளி நகையாட எண்ணிய கலைவாணர், அரிச்சந்திரனைச் சந்திரஹரியாக்கி உண்மை பேசுகிறவன் உதை வாங்குகிறான், பொய் பேசுகிறவன் பிழைக்கத் தெரிந்தவன் என்ற பெயர் வாங்குகிறான் என்று சித்திரிக்கிறார். அரிச்சந்திரனையும் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து மகாத்மா ஆன கரம்சந்த் காந்தியையும் ஓரம்போ' என்று சொல்லாமற் சொல்லும் காலம் இது. களையாக மிதிக்கப்பட்ட பொய், இன்று ஒரு கலையாக மதிக்கப்படுகிறது. தனிமனித வாழ்வில் மட்டுமல்ல, பொது வாழ்விலும் பொய் சொல்லும் வாய்க்கே போஜனம் கிடைக்கிறது. கவிதையில் பொய் கற்பனை ஆகிறது; கடையில் பொய் 'விற்பனை ஆகிறது. சாமியார்களின் பொய் மந்திரமாகிறது; சாமர்த்திய அரசியல்வாதிகளின் பொய் ராஜதந்திரமாகிறது. சண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்ற நம் முன்னோர்கள் சொன்னபடி தொலைக் காட்சியிலும் (வீடியோ) வானொலியிலும் (ஆடியோ) அன்றாடம் பொய் அலங்கார பவனி வருகிறது.