பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 46 யோரத்தில் நின்றுகொண்டிருக்கும் தலைவன் காதில் விழும்படி நடந்ததைச் சொல்லோவியமாய்த் தீட்டுகிறாள். யாங்கு ஆகுவமோ அணிநுதற் குறுமகள் தேம்படு சாராற் சிறுதினைப் பெருங்குரல் செவ்வாய்ப் பைங்கிளி கவர நீ மற்று எவ்வாய்ச் சென்றனை அவன் எனக் கூஉய் அன்னை ஆர்க்கும் பெருவரை நாடனை அயியலும் அறியேன் காண்டலும் இவனே வெதிர்புனை தட்டையேன் எதிர்மலர் கொய்து சுனைபாய்ந்து ஆடிற்றும் இவன் என நினையலை பொய்யலை அந்தோ வாய்த்தனை அதுகேட்டுத் தலை இறைஞ் சினளே அன்னை செலவொழிந்தனையால் அளியை நீ புனத்தே 'பிழைக்கத் தெரியாத இந்தப் பேதைப் பெண்ணைதலைவன் உடனே மணமுடிக்க வேண்டும் என்பது தோழியின் விருப்பம்: விண்ணப்பம். பாடலின் இறுதி வரியில் வரும் அளிமை' என்னும் ஒரு சொல் அதைப் பக்குவமாய் வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான நற்றிணைப் பாடல்களில் நயமும் நளினமும் குடியிருக்கும். கொள்ளம்பாக்கனாரின் இந்தப் பாடலில் கூடவே நாகரிகமும் கொலுவிருக்கிறது. 领 o