பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 48 கதைப் பெயர்களாகப் பத்தினிக் கல்லெடுப்புக்கு மாற்றியமைத் துள்ளார். மறக்குடியிற் கூடப் பிறவாது அறக்குடியிற் பிறந்த இல்லாள் இமயக் கல் எடுப்பதற்கு உரியவள் ஆவதைக் காட்டும் வஞ்சிக் காண்டத்தில் புதுமைப் பொலிவு பெறும் சங்க இலக்கிய மரபை ஒரு சிறிது காண்போம். அகப்புறப் பாகுபாடு: 'எல்லாப் பொருள்களிலும் ஏற்றம் பெற்றவை இரண்டே 'ஒன்று காதல்; மற்றொன்று வீரம்" என்ற கிரேக்கப் பெருங் கவிஞன் ஹோமரின் (Homer) கருத்தை மெய்ப்பிக்கும் இலக்கி யங்கள் சங்க இலக்கியங்கள். மறவன் ஒருவனுக்கே சங்ககால மங்கை மாலை சூட்டுவது வழக்கம். சேக்ஸ்பியரின் (Shakespeare) ஒதெல்லோ (Othelio) நாடகத்தில் டெஸ்டிமோனா (Desdemona) என்னும் பாவை நல்லாள் பேரிடர்களைக் கடந்த தன் வீரத்தை விரும்பிக் காதலித்ததாக ஒதெல்லோ கூறுவான்." ஒதெல்லோவைப் போன்ற ஆயிரக்கணக்கான ஆடவர்களையும் டெஸ்டிமோனாவைப் போன்ற வீரத்தை ஆரத் தழுவிய ஆயிரக் கணக்கான மங்கையர்களையும் சங்க இலக்கியச் சாலையில் சந்திக்க முடியும். காதலையும் வீரத்தையும் அகம், புறம் என்னும் பகுப்பின் பாற்படுத்தலாம். புறப்பொருள் நூல்களில் அறம், பொருள் முதலியவை இடம்பெற்றிருப்பினும் வீரமே செல்வாக்கான இடம்பெற்றுள்ளது. காதல், வீரம் என்னும் அகப் புறப் பொருட்களைத் தனித்தனியே எட்டுத் தொகையுள் சிறு சிறு பாடல்களிலும் அவ்விரண்டின் இணைப்பை சேர்க்கையைப் பத்துப் பாட்டில் உள்ள முல்லைப் பாட்டிலும் நெடுநல்வாடையிலும் காணலாம். 'வினையே ஆடவர்க்குயிரே என்ற பொருள் மொழியைப் பின்பற்றிப் போர் மேற்சென்று பாசறையில் தங்கியுள்ள

  • “Two things greater than all things are, one is love and the other is war"

- Homer * She loved me for the dangers I had passed"- Othelio