பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 54 "காதல் போயின்... என்பதை உடனே முடிக்காமல் நீட்டுகிறான். என்ன, என்ன, காதல் போயின் என்ன ஆகும்?.... என்று பெற்றோரும் மற்றோரும் கேட்கும்படி ஆவலைத் துண்டுகிறான். மறுபடியும், 'காதல் போயின்’ என்று முழங்கியதும் என்ன ஆகும்? என்று ஆவலோடு கேட்போ ரிடம் 'சாதல், சாதல், சாதல்' என்று தயங்காமல் விளைவை எடுத்துரைக்கிறான். நாடகங்கள், திரைப்படங்களில்கூடக் காதல் கதைகள் திருமணத்தில்தான் நிறைவு பெறவேண்டும் என்று எதிர்பார்த்த அந்த நாட்களில் காதலில், சாதலும் நேரலாம் என்று உறுதியாகக் கூறினான் பாரதி. காதலைப் பற்றி உயர்வாகப் பாடிய பாரதிதான் இவ்வாறு பட்டுக் கத்திரித்தாற் போன்று எச்சரிக்கையும் தந்துள்ளான். காதலில்தான் எத்தனை வகை பாரதியின் கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், பிள்ளைக்காதல், மறைந்த பின் காதல், பறவைக் காதல், விலங்குக் காதல், மனிதக் காதல், தெய்வத்தின் பேரில் காதல், ஒருதலைக் காதல், கனவுக் காதல் என்று பலவிதம்! காதலைப் பாரதி உன்னதமானதாக, மகோன்னதமான சக்தியாகப் போற்றினான். அவனது காதல் நலம் பாடும் கவித்துவம் 'காதல் கவிதைகள்” எனத் தலைப்பிட்ட கவிதைகளுக்குள் அடங்கிவிடுவ தில்லை. உலகின் இயக்கத்தில் அது ஊடுருவியிருப்பதைக் கண்டு சொன்னவன் பாரதி. அவனது கவிதைகளில் 5.ங்காவது காதல் வந்து நிற்கும். எடுத்துக்காட்டாக தேசிய கீதங்கள் வரிசையில் 'செந்தமிழ் நாடு' எனுந் தலைப்பில் பாடும் போதுகூட 'காதல் புரியும் அரம்பையர் போலிளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு” என்று 'காதல்’ இடம்பெற்றுவிடும். காதலைப் பாடாத தமிழ்க் கவிஞர் குறைவு. வாழையடி, வாழை யென வந்த தமிழ்க்கவிஞர் பரம்பரையிலிருந்து இந்த வகையில் பாரதி விலகிச் செல்லவில்லை. ஆனால் அதைக் கையாண்ட விதம்தான் புதிது.