பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 61 காதலினால் மானிடர்க்குக் கலவியுண்டாம் கலவியிலேமா னுடர்க்குக் கவலை தீரும்: காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம் கானமுண்டாம்: சிற்பமுதற் கலைகளுண்டாம், ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! இப்படிப் பயன்களை அடுக்கிச் சொல்லி, மனித இயல்பை அறிந்து, ஆதலினால் காதல் செய்யுங்கள் என்று சொன்னால் யார்தான் காதலிக்கமாட்டார்கள்? காதல் செயு மனைவியே சக்தி, கண்டீர் கடவுள்நிலை அவளாலே யெய்த வேண்டும். என்பான் பாரதி. சிலப்பதிகாரமங்கல வாழ்த்துக் காதையில் "காதலர் பிரியாது கவவுக்கை நெகிழாது கண்ணகி கோவலனுடன் வாழ்க என்று வாழ்த்துவார்கள். கைப்பிடித்த கணவரை இளங்கோவடிகள் 'காதலர்’ ஆகக் குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். பாரதி கைப்பிடித்த மனைவியை 'காதல் செயும் மனைவி' என்று குறிப்பிடக் காணுகிறோம். இதிலிருந்து மனைவி பெரும்பாலும் காதல் செய்யும் மனைவியாகவே செயல்படுகிறாள். மனம் இருந்தால் மணந்த பின் காதல் வரும் என்று பாடி எந்த வகையிலாவது காதலை வாழவைக்கும் முயற்சியில் பாரதி முனைகிறான். நாட்டில் சமுதாயத்தில் காதலைப் பற்றி மதிப்பீடு வேறுபடுவதை பாரதி சாடுகிறான். காதலைப் பற்றிய அளவுகோல் குடும்பத்திற் கொன்று, ஊராருக்குப் பிறிதொன்று எனப் பேதம் காணும் போலிப் பெரிய மனிதர்களை மட்டம் தட்டிக் கண்டனம் செய்கிறான் பாரதி. நாடகத்தில் காவியத்திற் காத லென்றால் நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றா மென்பர் ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார் என்டார். முடிவில், இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம் இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சியன்றோ? என்று பாரதி காதலின் புகழையே பாடுகிறான். 다.