பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 63 முற்பிறப்பில் மூன்று காதலர்களை ஏற்றுக்கொண்டு அவர்களைத் தமக்குள் சண்டையிடச் செய்து, சண்டையில் தமக்குள் அவர்களை மாறச்செய்து, மாண்ட குயிலிப்பெண்ணை காதல் அல்லது பக்தியின் உருவகமாக அவர் காணுகிறார் முதலாவதாக மாடன்மேல் உள்ள அன்பு ஆத்மாவின் உள்ளாழத்திலிருந்து எழுந்ததன்று. இரண்டா வதாக குரங்கன் குயிலி தொடர்பு; இதன் அடிப்படை பலவந்தம்; குரங்கனுடைய தந்தையின் செல்வாக்கிற்குப் பணிந்து குயிலை மணம்செய்து கொடுக்க இணங்கினான் அவருடைய தகப்பன். மூன்றாவதாக முக்கியமான திருப்பம்: மாடனுக்கோ குரங்கனுக்கோ வாழ்க்கைப்பட இருந்த பெண், அரச குமாரனைக் கண்டதும், காதல் வசப்பட்டு அவனுடன் கூடுகிறாள். அரசகுமாரன் இன்புறுகிறான். இந்த நிகழ்வுகளின் பின்னர் ஏற்பட்ட முடிவோடு ஏசுவிற்கு எதிராக இருவேறு அணிகள் செயல்பட்டதை விமர்சர்கள் ஒப்பிடுகின்றனர். மாடனும், குரங்கனும் தமது பழைய காதற் கோட்டையை மறந்து ஆளுக்கு ஒரு வீச்சாக அரசகுமாரன் மேல் கத்தியை iசியதை விமர்சகர் உருவகமாகக் கொள்வர். அது அவர்களுக்குத் தற்காலிக மாக வெற்றிதான். மரணத்தறுவாயில் அரசகுமாரன் வாள் வீச்சால் மாடன், குரங்கர்களை வீழ்த்தித் தள்ளுவது கவனிக்கத்தக்கது. அரசகுமாரனும், குயிலினது காதலின் அமரத்துவத்தை விளக்கி விட்டு மறைகிறான். ஆக அம் மறைவும் தற்காலிகமானது. இவ்வாறு, குருட்டு மரபும், பலாத்காரமும் விளைவிக்கும் இடையூறுகளை உண்மைக் காதலும் பக்தியும் அவற்றை எரித்து வெற்றியடைந்துவிடும். இதுவே குயிற்பாட்டின் உட்பொருள் என நிறுவுகிறார். விமர்சகர் நீதியரசர் எச்.ஆர்.கிருஷ்ணன், ஐ.சி. எஸ். மாயக் குயிலது. காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன் என்றதுவால் என்பதை மீண்டும் ஒருமுறை கூறிப் பார்க்கின்றான், கவிஞன். குயில்பாட்டு, ஸ்வசரிதையைப் போல அல்லாமல் முற்றிலும் ஒர் கனவாகும். ஆனால் தத்துவக் கனவாகும். ஆக, அது கனவிலும் கற்பனையிலும் திளைக்கிற ஒரு காதற் காவியமாகும்.