பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 64 அழகைத் தேடும் மனிதனின் அழகுணர்வே இக்குயில் பாட்டு என்பார் பிரேமா நந்தகுமார். இது புராணங்களின் மரபில் வந்ததென்பார் தெ.பொ.மீ. இதைக் காதலின் வீரகாவியம் என்பார் திரு.வி. சச்சிதானந்தம். இப்படிப்பட்ட காதல் காவியத்திற்கு வேதாந்தப் பொருள் கொள்ளலாம் என்பதை 'ஆன்ற தமிழ்ப்புலவீர், கற்பனையே யானாலும் வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றேயிடமிருந்தாற் கூறிரோ?” என்ற வரிகளின் மூலம் பாரதி தெரிவிக்கிறான். வேதாந்தக் கருத்துக்களை தனது பல பாடல்களில் இடம்பெறச் செய்த பாரதி அதற்கென்றே படைத்த தனியொரு காவியம்தான் குயில்பாட்டு என்று விமர்சகர்கள் வியந்துரைக்கின்றனர். வேடிக்கையாக இறுதியில் பாரதி இப்படிப் பாடி யிருப்பானோ என்ற எண்ண மெல்லாம் ஒரு சமயம் விமர்சகரிடையே இருந்துள்ளது. ஆனால் அவனது ஆழ்ந்த கவி உளம் காணும் திறம் பெற்ற அறிஞர் சோமசுந்தர பாரதியார் கூறுவார், 'எனக்குத் தெரியும் இவ்வித இடங்களில் சுப்பையா (பாரதி) வேடிக்கை பேசமாட்டான். அவன் சொன்னால் அதில் ஆழ்ந்த பொருள் இருக்கவே செய்யும். கவி மாத்திரம் அல்லன், அவன், வேதாந்தி, அனுபவ வேதாந்தி' இதன் மூலம் குயிலின் இசை வேதாந்த வாரிதியாக விரிவடையக் காண முடிகிறது. மாத்யூ ஆர்னால்டின் கைவிடப்பட்ட மெர்மான்' (Foresaken Merman) gigolô ¿gülcogujici, ¿Leólcõ outpou3T3 நம்பப்படும் மச்சகன்னி (Mermaid)க்கும் கரையில் உள்ள மனிதனுக்கும் காதல் ஏற்படுகிறது. ஸ்காண்டினேவிய தொல்கதை களின் அடிப்படையில் எழுந்த காதல் கதையே ( Legendary Romance) இக்கவிதைக்கதை. கடலுள் போன அவள் திரும்பவே யில்லை - இது தவளையும் எலியும் கதையாக அல்லவா உள்ளது? காதலிக்கலாமா? ஆனால் அவ்வாறு நடந்திராவிட்டால் நாள் தோறும் கடற்கரையில் நின்று காதலிக்காகக் கரையும் அவனின் ஒலம் மாத்யூ ஆர்னால்ட் மூலம் நமக்கு ஒரு காவியமாகக் கிடைத்திருக்காதே!