பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 80 என்றார். பாவேந்தர் 'சித்திரச் சோலைகளே - உமை நன்கு திருத்தஇப் பாரிலே - முன்னர் எத்தனைதோழர்கள் ரத்தம் சொரிந்தனர் ஓ! உங்கள் வேரினிலே, என்று உழைப்பாளர் மேன்மை பாடினார். பகுத்து உண்ணும் பண்பு மானிடர்க்கு வேண்டும் எனும் மனித நேயப் பண்பை வள்ளுவர் காமத்துப்பாலில் கூட நுழைக்கத் தவறவில்லை. தம்இல் இருந்து தமது பாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு [1107) பாத்தூண் எனும் பகுத்துண்ணும் பண்புக்கு ஈடாக தலைவியோடு காணும் இன்பத்தினைக் காண்கிறார் வள்ளுவர். எல்லோர்க்கும் எல்லாம் பொதுவாக வேண்டும் நெறியினை நடைமுறையில் கண்ட நாட்டினை, பாரதி குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையறக் குடிமைநீதி கடியொன்றி லெழுந்தது.பார்; குடியரசென்று உலகறியக் கூறிவிட்டார். என்று பொதுவுடைமைப் பூங்கா ருசியாவில் பூத்துக் குலுங்கியதை பாரதி வாழ்த்திப் பாடுகிறார். இதற்காகவே பாரதிதாசனும் புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று அழைப்பு விடுக்கிறார். இருக்கிற தெல்லாம் பொதுவாய்ப் போனால் எடுக்கிற வேலையும் இருக்காது என்று பட்டுக்கோட்டையும் புரட்சிப் பாதைக்கு வழிகாட்டுகிறான்.