பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 86 'மாடா இழுக்கிறோம் வேகமா-நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா" எனும் ரிக்ஷாத் தொழிலாளியின் அவலம் வீதியோரத்திலே வேலையற்றதுகள், வேலையற்றதுகளின் கண்களிலே விபரீதுத் குறிகள்' எனும் எச்சரிக்கையை சமுதாயத்திற்குச் சுட்டிக்காட்டவே "ரோட்டோர அவல நிலையைக் காட்டுகிறார். பட்டுக்கோட்டை கிட்டத்தட்ட 55 திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார். அவை 205 இருக்கும் என்று பாப்பையா தெரிவிக்கிறார். இவை மக்களைக் கவர்ந்ததற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் மொழியிலேயே மக்கள் தமிழிலேயே அவர் பாடினார் 'அறிஞர் குழுவிலே பேசப்படும் மொழியைவிட தெருவிலே பேசப்படும் மொழிக்குத்தான் அதிக ஆற்றல் உண்டு' என்று எமர்சன் கூறியிருப்பது எவ்வளவு உண்மை என்பது பட்டுக்கோட்டை பாடல்களுக்கு மக்கள் தந்த வரவேற்பிலிருந்து தெரிகிறது. பார்வையற்ற ஒருவனுக்கு நிறத்தை விளக்க வேண்டும் என்ப தற்காகப் பால் வெண்மையாயிருக்கும் என்று சொல்லவும், அது எப்படி இருக்கும் என, அது கொக்கு போல எனவும் அதையா கொடுத்தீர்கள், குழந்தை கழுத்தில் மாட்டி இறந்துவிடுமே என்று அழுதானாம் அவன் இது கதை. கொக்கு நிற வெண்மையைவிடக் குற்றமற்ற வெண்ணிறத்தைக் கூறுகிறார் கவிஞர். கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம் எனத் தொடங்கி அவள் அங்கம் யாவும் தங்க நிறம் ஆசை உள்ளம் சங்கு நிறம்: