பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 87 என்று உள்ளத்திற்கு நிறம் உருவாக்கிக் காட்டுகிறார். இது எப்படி? மீசைக்கு வேண்டுமானாலும் கருத்த மீசை, முப்பால் நரைத்த வெள்ளை மீசை என நிறம் இருக்கலாம். உள்ளிருக்கும் உள்ளத்தின் நிறம் யாரோ அறிவார். ஆசை இருப்பது எங்கே? இதயத்தில் - உள்ளத்தில். இதயத்தின் வடிவமைப்பினையும் சங்கையும் ஆப்பிட்டுப் பாருங்கள். உருவம் ஒற்றுமை புலப்படும். அது மட்டுமா? சங்கு சுட்டாலும் நிறம் மாறாது, கெட்டாலும் குணம் மாறாது மேன் மக்கள்போல. அவள் உள்ளமும் எவர் என்னைப் பழி தூற்றினாலும் மாறாதது. வடிவத்தாலும் குணத்தாலும் சங்கை ஒத்த இதயத்தாள் என்பதால், அவற்றின் ஆசை உள்ளம் சங்கு நிறம் என்று சரியாகச் சொன்னார். கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே: எனும் பாடல் வரிகளுக்கு பாப்பையா தரும் விளக்கத்தினால் எத்தனை எத்தனை பொருள்கள், புதுப்புது அர்த்தங்கள் புலப்படுகின்றன. அவைதாம் சம்பளம் வாங்கி சஞ்சலக் கடலில் மிதந்து கொண்டிருக்கும் வர்க்கத்தை அப்படியே ஈர்க்கும் வரிகளாக இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றன. வேடிக்கை மனிதனைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?? என்று கேடுகெட்ட மனிதரைச் சாடினான் பாரதி. வாய்ச் சொல்வீரர் என்று ஒதுக்கினான். இந்த வேடிக்கை மனிதர்களை கிராமத்தவர்கள் "வெண்ணைய் வெட்டிச்சிப்பாயி" என்ற கேலியாகச்சொல்வதைக் கேட்டுப் பழகிய பட்டுக்கோட்டை சாடுவதோடு எச்சரிக்கையே செய்கிறார்: 'இந்தத் திண்ணைப் பேச்ச வீரரிடம் - ஒரு கண்ணாயிருக்கனும் அண்ணாச்சி: என்று வெண்ணை வெட்டிச் சிப்பாயைப் போல இந்தத் திண்ணைப் பேச்சு வீரர் சோம்பேறிகள் மட்டுமல்ல, சூதுமதியினர், என்று எச்சரித்து வைக்கிறார்.