பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 95 வைக்கிறது. மற்றவர்களுக்கு ரோஜாவில் முள் பெரிதாய்த் தெரியும்; அதிலாவுக்கோ முள்ளைவிட ரோஜாவே பெரிதாகத் தெரிகிறது. இயகணவனிடம் உள்ள ஒன்றிரண்டு நற்குணங்களே அவளைக் கவர்கின்றன: அவர்ரொம்பநல்லவர். நல்லவராஇருக்கிறதனாலே தான் அவர் இவ்வளவு கஷ்டப்படுகிறார். அவர் பொய்யனாக இருந்திருந்தால் இதையெல்லாம் சொல்லமலிருந் திருக்கலாம். அப்படி என்னை ஏமாத்தி சந்தோஷமா இருக்கிறதுக்கு அவரால் ஏன் முடியலே அவர் ரொம்ப உண்மையானவரா இருக்கிறதுனாலே தானே?..... அவருக்கு என்னோட உதவி தேவையாயிருக்கு. நான் அவருக்கு உதவியாவே இருக்கிறதுண்ணு தீர்மானம் பண்ணிட்டேன். வேற என்ன செய்தாலும் நம்ப குடும்பத்தின் நிலை மோசமாயிடும்.... நினைச்சுப் பாருங்க-மூணு குழந்தையும் தாயுமா அவரை நம்பி இருக்கிற ஒரு ஏழைப் பெண்ணை நிர்க்கதியா விடலாமா அது பாவமில்லையா?: (பக்.120) என்று பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மாமியார் கமலாம் பாளுக்குக் கையெடுத்துக் கும்பிடலாம் போலத் தோன்றுகிறது 'நடந்தது நடந்தாச்சு' - இனி அதைப் பெரிதுபடுத்தி, தன் வாழ்க்கையையும் கணவன் வாழ்க்கையையும் நரகமாக்கி, தன் பெற்றோர் நிம்மதியைக் குலைத்து, இரு குடும்பங்களின் கெளரவங்களைக் குழிதோண்டிப் புதைக்க அவள் விரும்பவில்லை. இவ்வளவுக்கும் திருமணம் ஆகும் வரை, ஆடவர்க்கு அடிமை யாகாமல் கன்னியாக இருந்துவிடலாம் என்று சிந்தித்தவள்தான். மாமியாரோ, ஒரு பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே' என்று புலம்பி தன்மகன் பாலசுந்தரத்தை விரட்டியடிக்கத் துணிகிறாள்; அகிலாவிடம் அவன் உனக்கு வேணாம்' என்கிறாள். வீட்டுக்கு வந்த அண்ணனோ"Divorce him" என்கிறான். இருந்தும் அவள் "இந்த வாழ்க்கையை நான் ஏன் தாங்கிக்கொள்ளக் கூடாது?" என்கிறாள். அப்படியே தீர்மானிக்கிறாள்; தன் பிரச்சனைக்கு அதுவே தீர்வு என உறுதியாகக் கருதுகிறாள். பொதுவாக ஜெயகாந்தனின் நாவல்களில் வருகிற கதாபாத் திரங்கள் ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் முரண்படுகிறபோது