பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 97 இந்த வாழ்க்கையை நான் ஏன்தாங்கிக்கொள்ளக்கூடாது? என்று ஆதிலா நாவலின் முடிவில் தன் அண்ணனிடம் கேட்கும் போது கம்பன் சீதையிடம் கண்ட இரும்பொறை அவளிடம் அப்படியே இருப்பதைக் காணமுடிகிறது. இளங்கோவின் பத்தினித் தெய்வமாகவே அகிலா மாறுவதை உணர்வதை - ஜெயகாந்தன் புத்தார்வத்துடன் வருணிக்கிறார். போற்றா ஒழுக்கம் புரிந்தீர் என்ற தன்னகியின் வார்த்தையில் உள்ளகடுமை கூட சொல்லுங்கள்-நான் செத்துப் போய்விடவில்லை என்ற அகிலாவின் கூற்றில் இல்லை. அப்படி ஒரு மென்மை! அப்படி ஒரு மேன்மை! இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் - நன்யைஞ் செய்யும் வள்ளுவப் பண்பாடு; நயத்தக்க நாகரிகம். காவியத்தின் மறு அவதாரமான நாவலில் காவிய அழகுகள் வாய்த்திருக்க வேண்டும். ஜெயகாந்தனின் இந்த நாவலில் இலட்சியப்படுத்தல் (IDEALIZATION) உட்பட எத்தனையோ அழகுகள் காவிய வனப்புகள், 다. காவியத்தில் வரும் கிளைக்கதைகள் போல் இந்தக் குறுநாவலில் இரண்டு சிறுகதைகள் ஈஸ்வரன் பிள்ளை - பார்வதி அம்மாளின் கதை, டேவிட் அமிர்தம் கதை - அருமையாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன. திருமணமாகி கணவன் வீடு செல்லும் மகளையும் விடுமுறையில் தங்கை திருமணத்தை முடித்து ராணுவப் பணிக்குப் புறப்படும் மகனையும் ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டுத் திரும்பும்போது தன் மனைவி பார்வதியிடம் 'புறப்படலாம். இனிமே நாம் இரண்டு பேரும் - கல்யாணமான காலத்திலே விரும்பினோமே அந்த மாதிரி தனிக்குடித்தனம் நடத்தலாம்' என்கிறார் ஈஸ்வரன் பிள்ளை. திருமணம் ஆனதும் ஈஸ்வரன் பிள்ளையும் பார்வதி அம்மாளும் தனிக்குடித்தனம் நடத்த முடிந்ததா? அந்த ஆசை இருவருக்கும் இல்லையா? இருந்தது. பார்வதி அம்மாளுக்கு நிறையவே இருந்தது. ஆனாலும் ஈஸ்வரன் பிள்ளை தனிக்குடித்தனம் போகவில்லை; போக முடியவில்லை; வயதான அப்பா அம்மா, தம்பிகள் தங்கைகள் . இவர்களைக் காப்பாற்றும் கரை சேர்க்கும்