பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசியத்துச் சோதி அணையுங்கால், நாம்ஓடிப் பாசக்கை யால்தடுத்துப் பார்க்க முடியவில்லை! 마 கண்ணில் கருத்தில் கதிர்வளர்த்தோன் தான்பிறந்த மண்ணை இனத்தை மனங்கொடுத்துக் காதலித்தான்; சிற்பத்தைக் காதலித்தான்; சித்திரத்தைக் காதலித்தான்; கற்பனைப் பாவாணர்தம் காவியத்தைக் காதலித்தான்; நந்த வனத்தை நதியழகைக் காதலித்தான். அந்தி மலரை அழகுக் குழந்தைகளைக் காதலித்தான் அந்தக் கலைஞன்.ஏன் இன்றுநமைப் பேதலிக்க வைத்திட்ட பேய்ச்சாவைக் காதலித்தான்? 다. சென்று விட்டான் சித்தன் நாம் செய்வதினியாது? ஒன்றும் புரியா(து) உழல்கிறதே உள்ளம். இனிமேல் நிழல்ஏது? எங்கொதுங்கி நிற்போம்? இனிமேல் தலைவரென யாரைநாம் காட்டுவது? நேரு சிரமிருந்த நீதி முடிசூட வேறு மனிதர்க்கு வீரம் கிடையாது! நேர்மை வடிவெடுத்து நின்ற கருணைமகன் ஒர்நொடியில் எங்கோ ஒளிந்தசெயல் மெய்யாய் 105 0 மீரா கவிதைகள்