பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊண்வேண்டும் நீர்வேண்டும் என்றே வாயால் உன்ரத்ததுண்டா ஓயாமல்? துன்பத் தூண்டில் மீன்போலத் துடிக்கின்ற கொடுமைத் காக மிகவருந்தி ஒப்பாரி வைத்த துண்டா? மேன்மையுள்ள மனக்கருத்தை யாருக் கேனும் மெதுவாகச் சொன்னதுண்டா? இல்லை! அந்தோ நான் ஊமை நான் ஊமை வார்த்தை யாடும் நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை? 마 நான் உலகைப் பார்த்ததில்லை! ஒசை யாவும் நான்கேட்ட தேயில்லை! இனிதாய்ப் பேசத் தான்என்றும் முடியவில்லை! ஆமாம்! உண்மை! தணல்சூழ்ந்த குடிசைக்குள் கிடப்ப தேபோல் ஏன் இன்னும் இருக்கின்றேன் என்றே நாளும் எண்ணுகிறேன்; விம்முகிறேன்; என்ன செய்வேன்? நான்மனிதன்! நான்மனிதன்! அதனால் சாக நடுங்குகிறேன் நடத்துகிறேன் ஆசை வாழ்க்கை! 'தமிழ்நாடு’ மீரா கவிதைகள் .ெ 108