பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் வருவாரா? விண்மீன்கள் வீழட்டும்; பொதிகைக் காற்று வீசாமல் போகட்டும்; பொன்னி ஆற்றுத் தண்ணிரின் மெல்லலைகள் இன்று தொட்டுத் தணல்அலைக ளாகட்டும்; கவலை இல்லை! கண்ணிரில் மலர்ந்திருக்கும் பூக்கள் நாங்கள். கடலைப்போல் கொந்தளிக்கும் எங்கள் நெஞ்சம். பண்பாடும் யாழ் மண்ணில் வீழ்ந்த தேபோல் பாழ்பட்ட பின்னும்ஏன் பேச்சும் மூச்சும்? கடலுக்குள் முத்தெடுக்கும் கடன்மேற் கொண்டோம்; கல்லுடைத்தோம்; மலைகுடைந்தோம்மண்சுமந்தோம் சுடும்வெப்பத் தால் வியர்வை சொட்டச் சொட்டத் தொகைதொகையாய்க் கட்டிடங்கள் தோற்று வித்தோம்; படர்ந்திருக்கும் முட்காட்டை அழித்துச் செந்நெற் பயிர்வளரும் வயலெடுத்தோம்; எனினும் எங்கள் உடலுக்குள் உயிரில்லை! உழைத்து ழைத்தே ஓடானோம் புயற்காற்றில் ஒட மானோம்! 109 0 மீராகவிதைகள்