பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுதற்குத் துணியில்லை; பிறந்த மேனிக் கலைக்காட்சிப் பொருளாகக் கருகும் எங்கள் மொட்டுகளைப் பாருங்கள்; இந்த வாழ்க்கை முறைசரியோ கூறுங்கள் இரக்கம் இல்லார் வெட்டுகின்ற பலியாடா? இல்லை நீரில் விட்டெறிந்த தமிழ்ஏடா நாங்கள்? செந்தேள் கொட்டுவதை ஒருவாறு பொறுக்கக் கூடும்; கொடும்பசியை எவ்வாறு பொறுக்கக் கூடும்? வாடையிலே மயில்நடுக்க முற்ற தாக மனம்வாடித் தன்னுடம்பில் போர்த்தி ருந்த ஆடையினை அணிவித்தான் பேகன் என்றே அழகொழுகப் பேசுகின்றார் மேடை தோறும்! வாடையிலே மெய்நடுங்க பறையைப் போல வல்லோசை தனைப் பற்கள் எழுப்ப, நாங்கள் வாடையிலே வருந்தையிலே உதவ ஓடி வருவார்யார்? வாழவைக்கும் வள்ள லார்யார்? தைத்திங்கள் வருகின்ற பொங்கல் நாளில் தங்கத்தைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கும் நெய்ப்பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சி கொள்வர் நிதி படைத்த சீமான்கள்; என்றும் எங்கள் கைதொட்டு வாய்பட்ட துண்டோ பொங்கல்? கண்மட்டும் ஓயாமல் பொங்கும் பொங்கும்! தெய்வங்கள் திருநாட்கள் எங்கட் கில்லை; தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்? 'தென்ற கவிஞர் கண்ணதாசனின் அன்னையார் நினைவு போட்டியில் பரிசு பெற்ற கவிதையின் ஒரு பகு மீரா கவிதைகள் 0 110