பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நீராடப் போதுவீர்...." (முதற்பதிப்பின்தொகுப்புரை) முனைவர் மா.பெ. சீனிவாசன். 'இவர் ஒரு மகாகவி. இவரைப் போன்ற ஒரு கவிஞர் தமிழ் நாட்டில் பிறக்கக் கொடுத்துவைத்தது நாம்செய்த பாக்கியம். இதை மக்கள் இன்று உணராவிட்டாலும் பின் ஒரு காலத்தில் உணருவார்கள்' - இந்தப் பொருளுரை யாருக்கு, எப்போது, யாரால் வழங்கப்பட்டது என்று நினைக்கிறீர்கள்? இது, பாரதிக்கு, அவர் வாழ்ந்த காலத்திலேயே, பரலி. சு. நெல்லையப்பரால் வழங்கப்பட்டதாகும். நெல்லையப்பரின் வாக்கு இன்றைக்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது; அங்கிங்கெனாதபடி எங்கும் பாரதி புகழ் பரவி வருகிறது; தமிழ்கூறு நல்லுலகம் பாரதியை விடுதலைக்கவிஞன் என்றும், புதுமைக் கவிஞன் என்றும், மக்கள் கவிஞன் என்றும் போற்றிப் புகழ்கிறது. பாரதி வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிட்டாத பீடும் பெருமையும் இன்று அவரைத் தேடித் திரிகின்றன. இந்த மாற்றம் எதைக் காட்டுகிறது? உயிருள்ள பாடல்களை உருவாக்கும் உண்ம்ைக் கவிஞனை உலகம்