பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * உயிர்த் திருநாள்! ஒருமுறைதான் வரும்; வாழ்வில் வாய்ம ணக்கும் உரையாடல் தொடக்கிவைக்கும்; இரண்டு நெஞ்சில் ஒருநினைவை உண்டாக்கும்; அடடா அந்த உயிர்த்திருநாள் திருமணநாள் ஆண்டுதோறும் பொருளற்ற விதத்தில்வரும் விழாநாள் எல்லாம் புசிக்கமுடி யாவேப்பங் காய்நாள் நோய்நாள் திருமணமோதித்திக்கும் பலாச்சு ளைநாள் தெய்வீக மாளிகையைத் திறக்கும் பொன்னாள் ஆட்டனத்தி ஆதிமந்தி நெருக்கங் கொண்டே அணுவிற்குள் அணுத்தோற்றம் எடுத்தார்; வஞ்சி நாட்டரசன் குட்டுவனும் இளவேண் மாளும் நாளெல்லாம் காமத்துப் பால்கு டித்தார்; பாட்டரசர் பிசிராந்தை யாரும் காதற் பள்ளியிலே பொழுதெல்லாம் படித்தார்; முன்னோர் ஏட்டிலுள்ள இத்தகைய செய்தி யாவும் இனியதமிழ்த் திருமணத்தின் ஏற்றங் கூறும்! 128 .ெ மீரா கவிதைகள் LBrn