பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்காரத் தமிழகத்தில் 'தைதை என்றே சிரித்தாடி வருகின்ற கவிதைப் பெண்ணே! மங்காத பசும்பொன்னே உழவன் வீட்டு மருமகளே! திருமகளே! தலையைத் தொட்டுத் தொங்காமல் தொங்கும் பூ மரத்தின் கீழே தோகைமயில் நடனமிடப் பார்த்தால் உள்ளம் பொங்காமல் இருப்பதில்லை; உன்னைக் கண்டு பூரிக்கா திருப்பவரும் புவியில் இல்லை! செஞ்சிக்கும் தேசிங்கு ராசனுக்கும் சிறப்பான உறவுண்டு; வாழும் பூவா வஞ்சிக்கும் சேரர்தம் பரம்ப ரைக்கும் வரலாற்றுத் தொடர்புண்டு; தகடுர் வேந்தன் அஞ்சிக்கும் ஒளவைக்கும் சான்றோர் போற்றும் அன்புள்ளப் பிணைப்புண்டு; மணம்பரப்பும் இஞ்சிக்கும் மஞ்சளுக்கும் தையே, உன்றன் இனிப்பான வருகைக்கும் சொந்தம் உண்டு. 130 0 மீரா கவிதைகள்