பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதித்தெழுந்த இளம்பரிதி வானில் தீட்டும் ஒளி ஒடை ஒவியத்தைப் பார்த்துத் துள்ளிக் குதித்தாடும் குழந்தையுடன் பெண்கள், வீட்டில் கோலமிட்டுக் குத்துவிளக் கேற்றி வையை நதித்தமிழில் புதுத்தமிழில் பாடிப் போற்றி நாடெங்கும் கொண்டாடும் வண்ணம் மெல்ல மதித்தெழுந்து வந்த உன்னை வரவேற் பார்கள்! மார்கழிப்பெண் பெற்றெடுத்த மகளே! வாவா திசையெங்கும் ஒளிவெள்ளம்! அடடா தெருவெங்கும் களிவெள்ளம் தோர ணங்கள் அசைந்தெங்கும் அழகாகத் தொங்கும்; சொட்டும் அருவிதரும் ஓசைபோல் செவிந னைக்கும் இசைபொங்கும் எங்கெங்கும் வியர்வை சிந்தும் ஏருழவர் இல்லத்தில் ஒட்டிக் கொண்ட பசைபோன்ற பசிநீங்கும்; இன்பம் பொங்கும்! பாட்டாளித் திருநாளே, எல்லாம் உன்னால்! 1963இல் எழுதியது. 2002 செம்மவர் பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்தது. மீரா கவிதைகள் 0 131