பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையைநதிக் கரையினிலே வளமுண் டாக்கி வருகின்ற வாரிதியே கண்ணில் தீட்டும் மையைவிடக் கறுப்பான மனவி ருட்டை மாய்க்கின்ற கதிரவனே! பசுவின் தூய நெய்யைவிட மணமுள்ள குறட்க ருத்தை நெடுஞ்செழியன் நிலமிருந்து வழங்கி இந்த வையகத்தை வாழ்விக்கும் மழையே! என்றும் வளர்கின்ற துரைசாமி மலையே! வாழ்க! 'இது, சிவகங்கை வள்ளுவர் இலக்கியப் பேரவையின்சார்பில் மூன்றாம் ஆண்டுக் குறள் விழாவில் உரைவேந்தர். ஒளவை சு.துரைசாமி அவர்கட்குக் கவிஞர் பாடியளித்த மணிவிழாப் பாராட்டிதழ். 136 .ெ மீராகவிதைகள்