பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுதான் இந்தியா! ஒளரங்க சீப்பின் அப்பன் அன்றைக்கு ஆக்ரா நகரில் அதிசய மாகக் கட்டி வைத்துள காதற் கோயிலைக் கண்டேன்! கண்டேன்! கன்னிய ரோடு யசோதை மைந்தன் பாடித் திரிந்த யமுனைக் கரையை, யாவரும் புண்ணியம் தேடித் தீர்த்தம் ஆடிக் களிக்கும் கங்கை நதியைக் கண்டேன்! கண்டேன்! பனிபடர் இமயம் பண்டரி புரத்தொடு பற்பல இடத்தைப் பார்த்தேன்! பார்த்தேன்! கொடிபறக் கும்செங் கோட்டை நகர்முதல் பற்பல நகர்களைப் பார்த்தேன்! பார்த்தேன்! ஆலைகள் அணைகள் அரிய பெருந்தொழிற் சாலைகள் கண்டேன்! வானளா வுயர்ந்த கூடமும் மாடமும் கோயிலும் கண்டேன்! அடடா இன்னும் ஆயிரம் கண்டேன்! சுதந்திர பாரதம் சுறுசுறுப்பாக வளர்வதைக் கண்டேன்; திட்டங்கள் தீட்டி மீரா கவிதைகள் 0 145