பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காச நோயினால் கடும் துயருற்றே இருமி இருமி எலும்புக் கூடாகி மதுரை அரசாங்க மருத்துவ மனைக்கு அனுமதி கேட்டு மனுப்போட் டானாம்! எப்போ(து) என்கிறாய்? ஏழாண்டு கட்குமுன்! பத்துநாட்களுக்குமுன் படுக்க வாவென ஆறுமுகத் துக்கு அஞ்சல் போனதாம்; அஞ்சலை வாங்கி ஆறுதல் அடைய அவன் அங்(கு) இல்லை! இரண்டாண்டு கட்குமுன் காலன் சாவுக் கடிதம் போட்டு ஆறு முகத்தை அழைத்துக் கொண்டாளாம்! எப்படி நமது இந்தியா? என்று சினத்துடன் கேட்டான் சின்னச் சாமி! பின்னர், திருப்பதி சாமி திருப்பதி சாமி! இராமாயணத்தில் இலங்கையைப் புகழும் ஆஞ்சனேயன்போல் அழகாய்ப் புகழ்ந்தீர்! உச்சிப் பொழுதில் ஒருநாள் ஆற்றங் கரையில் நானும் கழுகாசலமும் நின்றுகொண்டிருந்தோம்; ஆற்றில் ஒருவர் இரண்டுமணி நேரம் பிறந்த மேனியுடன் குழந்தை போலக் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்கள் இரண்டால் கண்டோம்; பிறகுதான் அவ்வளவு நேரம் அவர்குளிப் பதற்குக் காரணம் அறிந்தோம் கந்தையா யிருந்த வேட்டி மரத்தில் காய்ந்தகொண்டிருந்தது! இன்னொரு வேட்டி இல்லை போலும்! ஒற்றை வேட்டி உலரும் வரை அவர் மீராகவிதைகள் 0 148