பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடர்விடு மின்னைப் பிடித்தே வாளாய்ச் சுழற்றிடத் துடிக்கின்றேன். சுளைத்தேன் பழத்தில் சிவந்த கனலின் சூட்டைத் தேடுகின்றேன். மண்ணுக் குள்வெண் முத்துக் குளிக்கும் மாயம் நாடுகின்றேன். மாலைப் பொழுதைக் காலைப் பொழுதாய் மாற்றிடப் பார்க்கின்றேன். விண்ணுக் கொளிதரும் வெள்ளிக் கிண்ணியில் விருந்துண விரும்புகின்றேன். - வெண்முகி லுக்குள் படுத்துக் கிடக்க வேட்கை கொள்ளுகின்றேன். கண்ணுக் குள் உளதுக்க உணர்வைக் கவிசெயத் தவிக்கின்றேன். கையில் மலையைக் கடுகாய் நிறுத்திக் காட்டக் கருதுகின்றேன். எண்ணுக் குள்ளே முட்டை வடிவம் எடுக்க நினைக்கின்றேன். என்னுள் நானே இல்லை என்றே இசைக்கப் பார்க்கின்றேன். 1962 -'சுவை தொகுப்பிலிருந்து. 151 0 மீரா கவிதைகள்