பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளைப் பருவத்தில் எல்லாம் சுகக் கன்னிக் கனவினில் மூழ்கித் - தினம் வேளை தவறாமல் உண்டு - திண்ணை வீழ்ந்து துயில்கொண்ட தல்லால் இரு தோளைத் திரண்ட மலையாக்கி - நான் தொண்டு புரிந்ததுவும் இல்லை - இனி நாளை உலகத்திற் கேனும் - என்னால் நன்மை விளைந்திடச் செய்வாய்! மேடை பலப்பல ஏறிக் - கரு மீசை முறுக்கியே நின்று - நித்தம் கோடை இடியாய் முழங்கி - ஒரு கூட்டம் தனைச்சேர்த்த தல்லால் - சிறு கூடை முடைந்ததும் இல்லை - உனைக் கும்பிட்டுக் கேட்கிறேன் தாயே - நான் பாடையில் ஏறிடும்முன்னர் - ஒன்றைப் படைத்த பெருமை அளிப்பாய்! அற்பக் கதைகள் படித்து - மன தாரக் குடித்துக் களித்து உடல் விற்கும் வனிதையர் நிற்கும் நெடு வீதி இருட்டில் ஒதுங்கி உயிர்க் கற்பை இழந்தது மல்லால் நல்ல காரியம் என்னநான் செய்வேன்? - நவ சிற்பி இவனென என்னை - வையம் செப்பிடச் செய்திடு வாயே! மீரா கவிதைகள் 0 158