பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே அன்பின் வழிபா டுள்ளதோ அங்கே தலைவை; ஆயிரம் மலர்வை! இறைநிலை எய்தல் இருக்கட்டும்; முதலில் மனிதனாய் மாறு; மாற்று உன் சாதியை செத்த பிணத்தைக் கொத்துங் கழுகினும் கொடியதோர் உள்ளத்தைக் கொலைசெய்! இதோவாள்! கயமையைக் கைதுசெய்; கடுந்தண் டனைகொடு! 'எல்லாம் எனக்கே என்ப தினிமேல் எத்தர் ஏய்ப்புரை; இழிசினர் வழக்கு - நீ உன்னால் முடிந்ததை ஊருக் குதவு; உன்னால் முடியும்; உன்னை நீ நம்பு! மனத்தையும் பணத்தையும் கறுப்பாய் மாற்றும் பாவிகட் கிடையே பாடம் கூறு முதலாளித்துவ முதுகெலும் பைமுறி! பாடு படு வோர்க்கே பாரெனப் பாடு! சமத்துவச் சங்கொலி செய்து சமைத்திடு தம்பி, புதியதோர் தரணியே! ! }గ్రీక్ష 161 0 மீரா கவிதைகள்