பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியார் சம்சாரி ஆனார்! மாதரைத் தழுவியே மயங்கிடும் வாழ்க்கையை மறுத்திடும் மனித ரெல்லாம் மாபெரிய பரலோகம் ஏகலாம் எனச்சொன்ன மணிக்குடிச் சாமி வாக்கைக் காதினில் வாங்கியே சிந்தையில் தாங்கியே கார்மேகம் ஒர்இ ராவில் கட்டிய மனைவியைக் கண்துயில விட்டொரு காசாயம் அணிந்து கொண்டு மாதவம் புரிந்திட மணிக்குடிச் சாமியார் மலரடித் தொண்டு செய்ய மாவேக மாய்ச்சென்றான்; சென்றவன் மடத்தினில் மணிக்குடிச் சாமி ஒர்பெண் பாதத்தை வருடியே பரலோகம் ஏகிடப் பார்த்துளம் பதைபதைத்துப் ’பரலோகம் இழந்தேனே பாவியால்; என்றனன் பைந்தமிழ் ஞானப் பெண்ணே! 1963 169 0 மீரா கவிதைகள்