பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏகாம்பரம் இருக்கிறான்! எதிர்மனையில் வாழ்ந்திடும் ஏகாம்பரம் ஒர்நாள் இரவிலே வாந்தி செய்தே இன்னலில் துடிக்கையில் இதயமே துடித்தந்த ஏழையின் மனைவி ஒடிக் குதிர் போலும் உடலுடைய கோயிற்பூ சாரியைக் கூட்டியே வந்து சேர்த்தாள் கூத்தாடிப் பூசாரி காளியைக் கும்பிட்டுக் குறிகேட்டுப் பின்னர், நாளை அதிகாலை இவனுயிர் அகன்றிடும்' என்றனன்; அழுதனர் பலரும்; சொன்ன அதிகாலை பூசாரி பூநாகம் தீண்டவே ஆவியை இழந்த தாகப் புதுச்செய்தி வந்ததே! ஏகாம்பரம்பிழைத்துப் பூசாரி பாடைதூக்கிப் புண்ணியம் பெற்றின்னும் பூமியில் இருக்கிறான் பூந்தமிழ் ஞானப் பெண்ணே! 1963 மீரா கவிதைகள் 0 170