பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q: (శ్రక్ష \T\EరT7 Οι ΧΣΚΣξαΩ جیمز பயிரிடைக் களைபோல் மணியிடைப் பதர்போல் உயரிய இலக்கியத் துள்ளே திணித்த இடைச்செரு கல்போல் இங்கே உளசில கடையரும் புலையரும் கயவரும் கூடி நாட்டை விற்கக் கையடிக் கட்டும்; மூட்டை சுமக்க முதுகைத் தரட்டும்; வெந்ததைத் தின்று விதிவந்து சாகட்டும்; பந்தைப் போல்பலர் கால்மிதி படட்டும்; உள்ளம் பெரிதாய் உள்ளவர் போலே கள்ளக் கதைகள் கட்டுரைக் கட்டும்; பொய்ம்மைக் கூத்துப் போடட்டும்; எனினும் மெய்ம்மை விரைவில் வெளிப்படும் நிலையாய்க் கார்கா லத்தின் காளான் இருக்குமா? நீர்மே கத்தின் மின்னல் நிற்குமா? ஒருநாள், திருவிழா முடிந்த வெறுங்களம் ஆவார். உருவிலா தழியும் தேய்நிலா ஆவார்! எதிரிகள் விளம்பரப் புகழ்ச்சியில் இன்புறும் 1810 மீரா கவிதைகள்