சத்துமதம் புத்தமதம் என்றும், வாழ்வுச் சஞ்சலத்தை அறுக்குமதம் சமணம் என்றும் முத்துமதம் வைணவமே என்றும், மண்ணில் மூத்தமதம் சைவம்தான் என்றும், உண்மை வித்துமதம் கிருத்துமதம் என்றும், ஈடாய் வேறுமதம் இசுலாமுக் கில்லை என்றும் எத்தனையோ மதப்போட்டி எழுந்த துண்டு; எல்லாரும் பூசலிட்டுச் சிதைந்த துண்டு! மதம்என்னும் எரிநெருப்பில் சாதி எண்ணெய் வார்த்ததுண்டு; மடமையினால் பரந்த நாடு முதுகுளத்தூர் ஆனதுண்டு; ஒவ்வோர் நாளும் முன்னுறுக் கும்மேலே கோத்தி ரங்கள் சதிராடிக் கொண்டிங்கே சிரித்த துண்டு; சனநாய கம்என்னும் பெண்க ழுத்தில் புதுமாலை சூடுதற்கு நூற்றுக் கும்மேல் போட்டியிடும் மாப்பிள்ளைக் கட்சி உண்டு! திருமூலர் மந்திரத்தைக் கேட்டும், மக்கள் திசைமாறிப் போனதுண்டு; அறத்தின் ஒற்றைக் கருவூலம் எனப்போற்றிப் புகழத் தக்க காந்தியும்தான் ஒற்றுமையைச் செம்மையாக உருவாக்க முடியாமல் ஒய்ந்த துண்டு; உபதேசம் உமியாகப் பறந்த துண்டு; நிருவாகம், சட்டங்கள் முயன்று பார்த்தும் நிமிர்த்தமல் உயர்த்தாமல் வளைந்ததுண்டு! மீரா கவிதைகள் 0 184
பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/183
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
