பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுமையாக விமர்சிப்பர் க.க.கா எழுதியபோது நீங்கள் இதைப் பற்றி நினைக்கவில்லையா? நினைத்தேன். ஆனால் இடையிடையே, நிலத்தை மீட்கப் போனேன், 'நான் ஏங்கல்ஸின் மாணவன், புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின் கூட்டுப் பண்ணைகளைப் படங்களில் பார்த்து மலைக்கும், ஓர் இந்திய உழவனைப் போல்....' என்ற வரிகளை இணைத்திருந்தேன். அதனால் முற்போக்கு வட்டத்தில் வரவேற்பே இருந்தது. தி.க.சி. பாராட்டிக் கடிதம் எழுதினார். தேசம் தழுவும் பொதுவுடைமைக்கு, வரவேற்புரை எழுதும்போதும், தேகம் தழுவும் உனக்கு - என் தனியுடைமைக்கு, வாழ்த்துரை எழுதும் போதும்: என்ற வரியை மட்டும் இளவேனில் கடுமையாக விமர்சனம் செய்து எழுதினார். பொதுவாகப் பொதுவுடைமைச் சார்புப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின. நீங்கள் சிவப்பு வட்டத்துக்குள் இருக்கும் கவிஞர் என்பதால்தான் இந்தப் பாராட்டு. இந்த வட்டத்துக்கு வெளியே இருப்பவன் க.க.கா: போல ஒரு நூலை எழுதியிருந்தால் கிழித்திருப்பார்கள். சோவியத்தை நீங்கள் ஆழமாக நேசித்தீர்கள். அது சிதறி உடைந்துபோன போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது..? என் கனவுலகம் உடைந்ததுபோல் இருந்தது. தி.மு.க திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட போது ஏற்பட்டதுபோல் மனத்தில் கலவரம் ஏற்பட்டது. 'க.க.கா: படிக்கும் போது அது வெறும் கற்பனையாகத் தெரியவில்லை. சுய அனுபவத்தின் கனல் தெரிகிறது. சரிதானா? சரிதான். கல்லூரி மாணவனாக இருந்தபோது எனக்கு நேர்ந்த அனுபவத்தில் மலர்ந்ததுதான் க.க.கா. 193