பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகிறது? திராவிடர் கழகத்தலைவர் திரு.கி.வீரமணி கொடுத்த பெரியார் விருதுதான் என் படுக்கையருகே இருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கை வழி வந்ததால் கடைசிவரை பகுத்தறிவுவாதியாக என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். கலைஞர் தம் பிள்ளைகளுக்குக் கலப்பு மணம் செய்வித்தவர். அண்ணன் கவிஞர்முடியரசன்தம் எல்லாப் பிள்ளைகளுக்கும் வேறு சாதியில் திருமணம் செய்வித்தவர். நான் என் மூன்று பிள்ளைகளுக்கும் சாதி மட்டுமல்ல, மதமும் மொழியும் கடந்து திருமணம் செய்து வைத்தேன். என்னைப் போல் என் பிள்ளைகள் இருப்பார்களா என்பது சந்தேகம். என் கருத்துக்களில் நூற்றுக்கு நூறு அவர்களுக்கு உடன்பாடு கிடையாது. நான் அவர்கள் உரிமையில் தலையிடுவது கிடையாது. மொத்தத்தில் ஒரு சீர்திருத்தவாதியாகவும் முற்போக்குச் சிந்தனையாளனாகவும் மனிதாபிமானி யாகவும் என்னை முதலில் வளர்த்தது திராவிட இயக்கம். ○ திராவிட இயக்கத்தில் இருந்தபோது என்முதல் கவிதை நூல் இராசேந்திரன் கவிதைகள், என் இயற்பெயரில் வெளிவந்தது. (அதற்கு முன் 1962 இல் 'சுவை” என்னும் கவிதைத் தொகுப்பை சிவகங்கை அரச குடும்பத்தைச் சேர்ந்த திரு. திருவரங்கராசன் மூலம் வெளியிட்டேன். அவர்தான் என்னைப் பதிப்புத்துறையில் ஈடுபடச் செய்த பெருமகன்) இராசேந்திரன் கவிதைகளை ஆராய்ந்தவர்கள் என்னை ரொவிட இயக்கக் கவிஞன் என்றும் பாவேந்தரின் வாரிசு ன்றும் குறிப்பிட்டுள்ளனர். Ο