பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவசமாக நின்றார்கள். பாலன் இல்லத்துக்குப் பலமுறை போய் தோழர் கல்யாண சுந்தரம், தோழர் ப. மாணிக்கம், தோழர் நல்லகண்ணு, தோழர் சீனிவாசன், தோழர் தியாகராசன் முதலானோரைச் சந்திப்பதும் ஆலோசனைகளைக் கேட்பதும் வழக்கம். பொதுவு டைமை இயக்கத் தலைவர்களின் எளிமை, பரிவு, எதையும் வர்க்கக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் பார்வை, திடசித்தம், போர்க்குணம் என்னைக் கவர்ந்தன. இளைய தோழர்கள் து.ராஜா, சி. மகேந்திரன், ஆகியோருடனும் அன்புப் பிணைப்புண்டு. 1959 இல் என் முதல் கவிதை தாமரையில் வந்தது. பாரதி பற்றியது. அதற்குப் பிறகு ஜீவா மலருக்கு எழுதினேன். எழுபதுகளில் தாமரையில் பொறுப்பாசிரியராக திரு.தி.க.சி. வந்தார். அவருடைய தொடர்பு என்னைத் தாமரையில் எழுத வைத்தது. எனக்கு அவ்வப்போது கடிதம் எழுதி என்னை வளர்த்தவர் அவர். 'கனவுகள் வந்த போது பேராசிரியர் நா.வா. ஆராய்ச்சி, சாந்தி ஆகிய இரு இதழ்களில் எழுதிய நீண்ட கட்டுரைகள், தாமரை செம்மலர், கார்க்கி முதலிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் சந்திர மண்டலத்திலிருந்து வந்த புது மனிதனைப் போல் என்னை வரவேற்றன. என்னை உற்சாகப்படுத்தி ஒரிரு இரவுகளைத் தூங்கவிடாமல் செய்தன. - திரு. பொன்னிலனைப் பொதுச் செயலராகக் கொண்ட கலை இலக்கிய பெருமன்றம், இஸ்கஸ், இந்திய ஜி.டி.ஆர். நட்புறவுக் கழகம் போன்ற அமைப்புகளில் பங்கு கொண்டு கவிதை பாடினேன். ஜனசக்தி பொன் விழாவில் கலந்து கொண்டேன். {D ஒருமுறை மானாமதுரையில் கந்தர்வனின் கிழிசல்கள் நூல் வெளியீட்டுக்கு மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் கே. முத்தையா வந்திருந்தார். அவர் தலைமையில் நானும் பேசினேன். அதற்குப் பின் எங்கள் தொடர்பு வலுப்பட்டது. அவருடைய நூல்களை அன்னம் மூலம் 30