பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்போது இரண்டாயிரம் ஏக்கரில் மாமல்லபுரம் சாலையில் தலைமைச் செயலகம் வரப்போகிறதாம். குமரிக்கண்டம் மறைந்ததுபோல் அந்த இரண்டாயிரம் ஏக்கரில் என் ஆசைக் கவிதா மண்டலத்துக்குரிய இருபது முப்பது ஏக்கரும் மறைந்து விட்டதோ. Ο 'மீரா கவிதைகளுக்குக் கலைஞரிடம் அணிந்துரை வாங்க நினைத்தேன். இந்தத் திசைமாறிய பறவைக்கு அவர் மனமிசைந்து தருவாரா என்ற தயக்கம் வந்தது. அத்துடன் அவர் உடல் நலங்குன்றியிருப்பதை நினைத்து விட்டு விட்டேன். CᎧ கலைஞருக்குப் பிறகு நான் மதிக்கும் தமிழறிஞர் முனைவர் தமிழண்ணல் அவர்கள். அவரைத் தொலை பேசியில் அணுகினேன்; கவிதைத் தொகுப்பை உடனே அனுப்புங்கள் என்றார். அவருக்கு இருக்கும் ஆயிரம் பணிகளுக்கிடையே அணிந்துரை எழுத ஒப்புக் கொண்டது உவகை அளித்தது. நான் முதுகலை முடித்துப்போன மறுஆண்டு அறிஞர் தமிழண்ணல் தியாகராசர் கல்லூரிப் பணிக்கு வந்தார். அதற்குமுன் கவிஞர் முடியரசனோடு காரைக்குடியில் பணியாற்றினார். படிப்படியாக முன்னேறி பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் ஆனார். தியாகராசர் கல்லூரியில் அவர் சேர்ந்ததும் அவரைப் போய்ச் சந்தித்தேன். அவருடன் பழகுவதற்கு முன் அவர் கவிதைகள் எனக்குப் பழக்கம். சிவகங்கைக்குக் குறள் விழாவுக்கு அழைத்தேன். அவரும் இசைந்தார். 62 ஆம் ஆண்டு கவிஞர் முடியரசன் தலைமையில் சுவை என்ற தலைப்பில் கவிபாடினோம். அதை நூலாக்கத் திட்ட மிட்டபோது நூலின் பிற்பகுதியில் சில உதிரிக் கவிதைகளை எழுதிச் சேர்த்தோம். அதில் பேராசிரியர் 35