பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை பிறந்த சூழல் தெரியாமல் எழுதப்பட்டிருக்கிறது. அப்போது தெலுங்கிசை ஓங்கி வளாது தமிழிசைக்குத் தடையாய் இருந்த நேரம். அதற்கு எதிர்ப்பாதத் தரன பாவேந்தர் அந்தக் கவிதையை எழுதினார். ೯76) குறிப்பிட்டிருந்தார். எனக்கு அதில் முக்கால் பங்கு உன்பாடு இருந்தது. அண்மையில் தமிழிசைக்காக நடந்த போராட்டம் குறித்துச் சென்னையில் கலைஞர் பேசிய அருமையான உரையை நந்தன் இதழில் படித்தபோது முழு உடன்பாடு ஏற்பட்டது. ஆனாலும் ஒரு சின்ன உறுததல. 'காதல் என்பது உயிரியற்கை என்று பாடிய பாவேந்தர்காதலுக்குத் தடையாய் மொழியைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்க வேண்டாம். அகல்யாவைக் (தெலுங்கச்சி) கிணற்றில் தள்ளியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அத்துடன் குருபக்தி காரணமாக விமர்சனத்தின் எல்லை விரிவடைவதைத் தடுக்கக் கூடாது என்றும் தோன்றியது. முனைவர் இலக்குமணப் பெருமாளின் மதிப்புரை மீண்டும் வெளிவரும் “மீரா கவிதைகளுக்கு அணிந்துரை எழுதும்போது அந்தப் பழைய விவாதத்தைக் தொடருங்கள், விருப்பப்படி எழுதுங்கள் என்று அண்ணல் அவர்களிடம் வேண்டியிருந்தேன். அவரோ மென்மையாக, மேலோட்டமாகத் தொட்டுக் காட்டியிருக் கிறார்.போதும் என்று விட்டுவிட்டார். ஆனாலும் மேன்மைமிக்க அணிந்துரை. O ஒருமுறை சிறுகதை மேதை ஜெயகாந்தன் சொன்னார்: இலக்கணத்தை முதலில் கற்றுக்கொள்ளுங்கள், அதற்குப் பிறகு மீறுங்கள் என்று. நான் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனாரிடம் தொல்காப்பியம் கற்றவன்; பைந்தமிழ்க் காவலர் அ.கி. ப அவர்களிடம் யாப்பிலக்கணம் கற்றவன். எனினும் இலக்கணம் உள்ள இந்தக் கவிதைகளிலும் சில மீறல்கள் உண்டு. கவிதை 38