பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுச்சிநிலை காட்டுகிறார். பக்தித் தொடர்பை விடக் காதலுறவு அழுத்தமாயிருப்பதை இவர் பாடல்கள் காட்டும். தமிழ், பொதுவுடைமை, சமுதாய சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் இவற்றில் இவர் பாரதியையும் பாரதிதாசனையும் ஒத்தவராகிறார். இன்றும் சென்னையிலுள்ள நூறு சபா'க்களில், தெலுங்குதான் இசைக்கப்படுகிறது; தமிழ் துக்கடாவாகிறது! துக்கடாவாகும் துக்கம் தொடரத் தொடர, 'சொன்னவை தெலுங்கர்க்குச் சுவைதரத் தக்கவை என்ற பாவேந்தரின் சீற்றமும், தெலுங்கச்சியின் காதலைப் புறந்தள்ளும் மனவேகமும் இன்றும் தேவைப்படுகின்றன. 'இதுதான் இந்தியா' 'போ போ' எனும் பாடல்களில் வரும் மீராவின் சீற்றம் அதைவிடக் குறைந்ததன்று. 'மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கீடில்லை என முழங்கிய பாவேந்தரின் மனச்சூழல் அது. இந்திய நாட்டின் இழிநிலை கண்டு பொங்கி எழும் மனச்சூழல் இது. சீற்றம் பொங்கிவிட்டால் குறிஞ்சி மலர்கள் நெருஞ்சி மலர்களாகிவிடுகின்றன. இவை 'ஒன்றிய உணர்ச்சியாலே, ஒரு வழிப்பட்டுப் பிறந்தவை என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு கவிஞனும் பிறரினும் விஞ்சி நிற்கும் இடமெனச் சிலவுண்டு. அங்கேதான் அவனது தனித்தன்மைகள், ஒப்பற்ற தனித்திறன்கள் வெளிப்படும். அதைக் கண்டு கொண்டால், மரபில் பூத்த புதுமலர் இதுவென மகிழலாம்! வேட்கை மீராவின் ஒப்பற்ற பாடல்களிலே ஒன்று கடலின் கரையில் மணலில் மாளிகை கட்டிட விரும்புகின்றேன் கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக் காதல் கொள்ளுகின்றேன் 5