பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொட்டுருவம் இதழ்காட்டும் பருவம்; வண்டு மொய்க்கின்ற மதுரமலர்க் குளத்தண் ணிரைப் பட்டுடலால் போய்த்தழுவும் வேளை, நானும் பாய்ந்தாடத் துணை வரவா என்று கேட்டுக் கட்டுடலைக் காட்டியவன் கரையில் நின்றான்! கைபிசைந்து முகஞ்சிவந்து சீற்றத் தாலே வெட்டுகின்ற மின் ஆனேன்; அவனோ என்னை வேடிக்கைச் சிறுவனென விரும்பி வந்தான்! மலருருவம் மணங்காட்டும் பருவம்; பாச மதுவூற்று நெஞ்சத்தில் பெருக்கெடுக்கப் பலரிருக்கும் வையத்தில் அவனை மட்டும் பார்ப்பதற்குப் பசிகொள்ளும் காதற் கண்கள்! நிலவொளியைப் புன்னகையில் நிறுத்தும் அன்பன் நெடுந்தோளில் சாய்ந்தின்பக் கவிதை பாடக் கலைமகளாய்க் காத்துள்ளேன்; அவனின்(று) என்னைக் கற்சிலையாய் நினைத்தானோ? எங்கே சென்றான்? தமிழ்நாடு 27-8-61 97 0 மீரா கவிதைகள்