பக்கம்:முகவரிகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொள்ளமாட்டான்' என்று வெங்கட்சாமிநாதன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

   "ஏழை என்பதற்கு நீ
    இனிமேல் பெருமைப்படு
    ஏனெனில்
    உலகத்தின்
    எல்லாச் சுகங்களும்
    இனி ஏழைகளுக்கே
    சமர்ப்பணமாகப் போகின்றன"


என்ற சிற்பியின் வரிகளையோ,


   'திரும்பத் திரும்ப நான்
    பார்க்கவும் கேட்கவும்
    அறவே விரும்பாத
    (அவையும்) இரண்டு:
    ஒன்று
    என் வளநாட்டின்
    தீரா வறுமை
    இன்னொன்று
    உன் தரிசனம் பெறாத
    வாழ்வின் வெறுமை"


என்ற மொழிகளையோ படித்தால் நிச்சயமாகச் சாமிநாதனுக்குத் தர்மசங்கடமாகத் தான் இருக்கும். காதலர்களுக்கு உதவுவதற்காக சிற்பி ஒரு தோழரை' வேறு வரவழைத்திருப்பதைப் பார்த்தால் சாமிநாதனுக்கு அதர்ம சங்கடமாகக் கூடத் தோன்றும்!

என்ன செய்வது?

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/107&oldid=970662" இலிருந்து மீள்விக்கப்பட்டது