பக்கம்:முகவரிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேடித்தேடி என்ற கவிதையில் இரவு எதை எதையோ தேடிப் போவதாகச் சித்தரிக்கிறார். எதைத் தேடுகிறது என்று கேள்விக்குமேல் கேள்வி எழுப்புகிறார்:

'முதலாளிகளின்
செவிச்சேற்றில் புதைந்து
செத்துப்போன
அழுகுரல்களை இது
தேடுகின்றதோ?”

என்பதும் அக்கேள்விகளுள் ஒன்று. இது முதலாளித் துவத்தின் முகமூடியைக் கிழித்துக் காட்டவில்லையா?

"இங்கே ஒரு புயல் பிறந்தால்
இதன் வளங்களைச்
சுட்டெரிக்கும் சுயநலக்காரரின்
சுவடுகள் அழியும்
பிறக்கவேண்டுமே.”

'பிறக்கவேண்டுமே’ என்பதில் உள்ள ஏக்கத்தொனி நம்மை எழ வைக்கிறது.

இவரால்தான் ஆரவாரமில்லாமல் புரட்சிக்குப் படைதிரட்ட முடியும்.


1974

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/19&oldid=968472" இலிருந்து மீள்விக்கப்பட்டது