பக்கம்:முகவரிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்பரின் கோட்டையைச் சுற்றிப் பார்த்தபோது கோட்டையின் சுற்றுச்சுவர்களைக் காட்டிலும் வாயில் நெடிதாய் உயரமாய் இருப்பதற்கு ஒரு வழிகாட்டி, காரணம் சொன்னார்.

போர்டிகோவில் செல்வச் சீமான்களின் கார் தயாராக இருப்பதைப் போல் அந்தக் காலத்தில் அந்தப்புர வாசலில் அரசனின் யானை தயாராக இருக்குமாம். அதில் ஏறி அமர்ந்து வரும் அரசனின் தலையை இடித்துவிடக் கூடாதே, அதற்காகத்தான் கோட்டைவாயில்களை உயரமாக அமைத்தார்களாம்.

இதேபோல் காசி விசுவநாதர் ஆலயத்துக்குச் செல்லும் வழிகள் எல்லாம் ஒடுங்கிய சந்துகளாக இருப்பதற்குத் தோழர் காரணம் கற்பிக்கிறார்.

இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிப் பகுதியில் இந்து முஸ்லீம் கலவரங்கள் பெருமளவுக்கு நடந்தன. முஸ்லீம்களின் தாக்குதலுக்குப் பயந்து கோவிலுக்குள் எந்த வாகனமும் நுழைய முடியாதபடி ஒடுங்கிய சந்துக்குள் ஆலயத்தை நிர்மானித்தார்கள். ஒருவர் பின் ஒருவராகத்தான் இந்த சந்துகளைக் கடந்து கோவிலுக்குள் நுழைய முடியும்."

ஒரு வரலாற்று ஆசிரியருக்கே உரிய கூர்ந்த பார்வை. இந்தப் பார்வை பெரிய பெரிய கோட்டை கொத்தளங்கள் உட்பட அக்பரின் இளம் துருக்கிய மனைவியின் குளியல் அறை வரை புகுந்து பாய்கிறது.

(நல்லவேளை.... அக்பர் சமாதியாகிவிட்டார்.)

இந்தப் பார்வை அங்காடியில் விற்கும் மசாலாப் பண்டங்களைக்கூட விடவில்லை.

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/26&oldid=968479" இலிருந்து மீள்விக்கப்பட்டது