பக்கம்:முகவரிகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"நமது ஊரில் மாங்காயை அறுத்து மசாலா போட்டுத் தருவதுபோல் இங்கு முள்ளங்கியை நறுக்கி மசாலா போட்டுத் தருகிறார்கள்."

என்கிறார்.

உண்மைதான். டில்லியில் எங்கும் எதிலும் மசாலா. வீதியில் ஓரிடத்தில் மசாலா தடவிய வெள்ளரிக்காயை வாங்கித் தின்றுவிட்டுப் பக்கத்தில் ஒரு கடையில் தொங்கிய ஒரு தமிழ்ப் பத்திரிகையை எடுக்கப்போனேன். கடைக்காரர் தடுத்தார். உள்ளே வேறொரு பிரதியைத் தேடிக் கொண்டிருந்தார். என்னுடன் வந்திருந்த பிறைக்கலைஞர் பிரபா "என்ன புரபசர், பத்திரிகையில் மசாலா தடவுகிறாரா" என்று குறும்பாகக் கேட்டார். நான் சொன்னேன். அதற்கு அவசியமில்லை. பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளில் உள்ளே இருப்பது அதுதானே."


ளந்துகொண்டு போகிறேனோ?

ஆனாலும் அவசியம் ஒன்றை அளந்தாக வேண்டும் புகழ்ந்தாக வேண்டும்.

அதுதான் அழகு!

சீருடை அணிந்த நர்சரிப் பள்ளிச் சிறுமியர்களின் சின்னச்சின்ன அழகு, டைரி வடிவத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூலின் பல பக்கங்களில் ஒளி வீசுகிறது.

அந்த அழகு உண்மை அழகு; உண்மையைத் தேடும் அழகு; ஆமாம்... உண்மையே அழகு.

அந்த அழகுக்கு இன்னொரு பெயர் சோவியத் ஆதர்சம்!

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/27&oldid=970624" இலிருந்து மீள்விக்கப்பட்டது