பக்கம்:முகவரிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரணம் கொடியது.

மரணம் நெடியது.

மரணம் நிலையானது.

மார்வெல் ஒரு சின்னஞ்சிறு வரியில் மரணத்தின் அசுரத் தோற்றத்தையும் அநியாயமான வேகத்தையும் அற்புதமாகக் கண்முன் நிறுத்திக் காட்டுகிறான்.

    ஆணாகப் பிறந்த நானும்
    கருக்கலையும் வேதனை அனுபவிப்பதை
    உன்னால் உணர முடிகிறதா?

என்ற உங்கள் வரிகளைப் படிக்கும்போது மரணத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளான உள்ளம் எப்படி நொறுங்கியிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது.

பிரசவ வேதனை பெரிய வேதனைதான்.

அந்த வேதனைக்குப்பின் ஒரு குழந்தையின் குதூகலச் சிரிப்பு மறைந்திருக்கிறதே!

ஆனால் 'கருக்கலையும் வேதனை...

உங்கள் கருக்கலையும் வேதனைக்குக் காரணத்தை அறியும்போது என் வேதனை அதிகமாகிறது.

    பல வழிகளில் நீயும்
    ஒரு பல்கலைக் கழகம் தான்
    ஆம்....
    சமுதாயத்திலிருந்து நீயும்
    என்னைப் பிரித்து விட்டாய்.

என்று உங்கள் தனிமைத்துயரம் வாழ்க்கையோடு ஒட்டாத இன்றைய கல்வி முறையை வம்புக்கு இழுக்கிறது. இந்த

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/32&oldid=970854" இலிருந்து மீள்விக்கப்பட்டது