பக்கம்:முகவரிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்தான இயக்கத்தாரை மட்டுமல்ல; கண் இமைக்காத தேவர்களையும் இவர் விடவில்லை. இவர் இலக்கணப்படி நல்ல கண்கள் என்றால் நொடிக்கு நூறு தரம் இமைக்க வேண்டும். ஏனாம்?

"என் கண்களுக்குள்
நீயல்லவா
குடியிருக்கிறாய்!
உனக்கு
வெண்சாமரம்
வீசவேண்டாமா?"

என்று காதலியைப் பார்த்துச் சொல்கிறார்; இத்தோடு நிறுத்துகிறாரா? இல்லை? தேவர்களை வம்புக்கு இழுக்கிறார்.

"நிச்சயம்
மிக நன்றாக இருக்கும்"

என்று பதிலைப் பந்துபோல் வீசுகிறார். இவருக்கு இருக்கும் செல்லக் குறும்பில் பாதியாவது அந்தத் தேவிக்கும் இருக்கும் அல்லவா!

நீ, "வீட்டுக்கு விளக்கு" என்று விளித்து நெருங்கும்போது தேவி 'வீட்டுக்கு விலக்கு' என்று கெட்டிக்காரத்தனமாக விலகி ஓடுகிறார்:

நல்ல நாடகம்!


நாடகமோ கதையோ கவிதையோ வார்த்தைகள் வைரங்களாக விழ வேண்டும்.

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/69&oldid=968530" இலிருந்து மீள்விக்கப்பட்டது