பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உடம்பைக் காக்கிற கவசம் என்பதோடு மட்டும் கூறாமல், அதன் எடை பற்றியும் அளவு பற்றியும் கூட ஆய்வறிஞர்கள் கண்டறிந்திருக்கின்றார்கள்.

சராசரி ஒரு மனிதனுக்குரிய தோலின் எடை 6 பவுண்டாகும். அதாவது 2.7 கிலோகிராம் ஆகும். இதன் எடை அளவானது ஒரு சராசரி மனிதனின் மூளை எடையை விட, இரண்டு மடங்கு அதிகமாகும். மனித மூளையின் எடை 3 பவுண்டாகும்.

இதனுடைய பரப்பளவு 18 சதுர அடியாகும். (1.7மீ)

தோலானது, உடலின் ஒவ்வொரு உறுப்பையும். மூடி மறைத்து வெளியுலகத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுகிறது. அது ஒரு வலிமை வாய்ந்த நீர்க்காப்புக் கவசமாக (Water Proof Wrapping) செயல்படுகிறது.

குளிருக்கும் வெப்பத்திற்கும் ஈடு கொடுத்துக் காக்கின்ற இணையற்ற கேடயமாகப் பயன்படுகிறது. இறுக்கிப் பற்றிக் கொண்டு உறுப்புகளுடன் தோலானது படிந்திருந்தாலும். எந்தத் திசைப் பக்கமாக உறுப்புக்கள் இயங்க வேண்டுமானாலும், எளிதாக விடுவித்து இயக்கத்திற்குத் தடையூட்டாமல், தாராளமாக உதவுகின்ற சிறப்பம்சம் கொண்டு விளங்குகிறது.

இதனுடைய முக்கியமான கடமையே பாதுகாப்புத் தருவதுதான் என்றே கூறிவிடலாம். குளிரிலிருந்து காக்கிறது. வெப்பத்திலிருந்து விடுவிக்கிறது. அடிக்கும் காற்றில், தூவி விழுகின்ற