பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

37


தூசியில், அதில் பதுங்கிப் பாய்ந்து வருகின்ற கிருமிகளில் இருந்தும் காக்கிறது.

உடலின் உள்ளே உணர்ச்சி பூர்வமாக, உற்சாகமாக ஒருமித்த செயல்பாடுகளுடன் இயங்கி வருகின்ற உள்ளுறுப்புகளுக்கும், அதே ரீதியில் இயங்குகின்ற ஐம்பூதங்களின் அளப்பறிய ஆற்றல்களுக்கும் இடையிலே தடுப்பாக (தோலானது) இருந்து எடுப்பாகவே செயல்பட்டுக் காக்கின்றது.

இப்படி எடுப்பாக, சோர்வு இல்லாமல் செயல் படுவதற்காகத் தோலானது, மூன்று பகுதிகளாகப் பிரிந்து கொள்கின்றது.

மனித தேகத்தில் அதிகமாகவும், விரைவாகவும் வளரக்கூடிய ஆற்றல் தோலுக்குத்தான் உண்டு.

1. வெளிப்புறத்தோல் (Epidermis) மென்தோல்

2. உட்புறத் தோல் (Dermis) மெய்த்தோல்

3. அடிப்புறத்தோல் (Subcutaneous layer)

1.வெளிப்புறத்தோல்:

வெளிப்புறத் தோலை மென்தோல் என்பார்கள். இந்தப் பரப்பில் மரிக்கும் தோல் செல்கள் (Dead Skin Cells) இருக்கின்றன.

நாள் ஒன்றுக்கு மில்லியன் கணக்கான செல்கள். தோலின் மேற்பகுதியிலிருந்து உதிர்ந்து போகின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல.